ஒபிஎஸ் கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.... கிராம மக்கள் போராட்டம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான ராட்சத கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் எனக் கூறி ஊர்மக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 5 ராட்சத கிணறுகள் உள்ளன. அந்த கிணறுகளில் அதிக திறன்கொண்ட மோட்டர்களைக் கொண்டு நீர் இறைப்பதால் ஊர்மக்கள் பயன்பாட்டுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டி வந்தனர்.

 Ops has to hand over one well to general public asked Lakshmipuram people

இந்த புகாரையடுத்து பொதுப்பணித்துறையினரும் கிராம நிர்வாக அலுவலரும் அந்த நிலத்தை அளந்து, கிணறுகளை சோதனையிட்டு மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் ராதாபுரம் கிராம மக்கள் ஒபிஎஸ்ஸுக்கு சொந்தமான 5 ராட்சத கினறுகளில் ஒன்றை ஊராட்சியில் ஒப்படைக்க வேண்டும். அதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்வர் என போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பலர் கலந்துகொணடனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் உண்டானதில் தள்ளுமுள்ளு எற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People of Lakshmipuram demanded that OPS having 5 big well and he has to hand over one well to panchayat. Then only people get water. With this demand they protested.
Please Wait while comments are loading...