ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டதும் சந்தித்ததும் உண்மைதான்.. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தது உண்மைதான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்தது உண்மைதான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த வருடமே சந்தித்து இருக்கிறார்கள். 2017 ஜூலை 12-ம் தேதி கோட்டூர்புரம் இல்லத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதில் ஆட்சி கவிழ்ப்பு குறித்து பேசப்பட்டது என கூறியிருந்தார்.
அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . ஆனால் தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் அதிமுக அமைச்சர்களும் மறுத்துள்ளனர்.

தினகரன் விளக்கம்
இந்நிலையில் அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தங்க தமிழ்ச்செல்வன் கூறியது குறித்து அவர் விளக்கமளித்தார்.

சந்தித்தது உண்மைதான்
அவர் பேசியதாவது, 2017 ஜூலை மாதம் ஓபிஎஸுடன் சந்திப்பு நடைபெற்றது உண்மைதான். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து இறக்க தயாராகிவிட்டேன் என ஓபிஎஸ் கூறினார்.

மன்னிப்பு கேட்டார்
மேலும் நான் பேசியது தவறுதான் என ஓபிஎஸ் கூறினார். என்னை பற்றி பேசியதற்காக ஓபிஎஸ் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஈபிஎஸுடன் இணைந்தது தவறுதான் என்றும் அவர் கூறினார்.
என்னை முதல்வராக்க தயாராக இருப்பதாகவும் ஓபிஎஸ் கூறினார்.

கடந்த வராம் கூட
ஓபிஎஸை சந்தித்தது தங்க தமிழ்ச்செல்வன் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியும். நான் எந்த முடிவையும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துதான் எடுக்கிறேன். கடந்த வாரம்கூட ஓபிஎஸ் என்னை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்தது.

தற்கொலை செய்துகொள்ளலாம்
ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் இணைய வாய்ப்பே இல்லை.
ஓபிஎஸ் எங்களின் சிலீப்பர் செல் கிடையாது.ஓபிஎஸ் ஈபிஎஸ் உடன் இணைவதற்கு தற்கொலை செய்து கொள்ளலாம். ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லை. ஒருவருக்கொருவர் சதித்திட்டம் தீட்டி வருகின்றனர்.

இப்போது பேசுவது ஏன்?
நான் தூதுவிட்டதற்கான ஆதாரம் இருந்தால் தங்கமணி வெளியிடலாம். ஓபிஎஸின் இரட்டை நிலைப்பாட்டை வெளிக்கொண்டுவரவும், தொடர்ந்து அவர் தூதுவிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்போது விளக்கமளிக்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார். தினகரனின்இந்த பேட்டி தமிழக அரசியலில் அனலை கிளப்பியுள்ளது.
[ தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் மகனின் பதில் என்ன தெரியுமா? ]
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications