For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து!

ஆங்கில புத்தாண்டு நாளை பிறக்கிறது. இதையொட்டி முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி:

OPS and TN political leaders extend New Year greetings

புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடச் செய்ய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதும் தான் தனது அரசின் குறிக்கோள் என்று சூளுரைத்து, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக அயராது பாடுபட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிட, அவர் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அவர் வகுத்த எண்ணற்ற திட்டங்களை சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

தமிழக மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களை மக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி, ஒற்றுமையுடன் அயராது உழைத்து, வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை உருவாக்கிட இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.

இந்தப் புத்தாண்டு தமிழக மக்களுக்கு மங்காத எழுச்சியையும், நிறைவான வளர்ச்சியையும், நீங்காத வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

உலகமெங்கும் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும், மனித நேயத்தோடும், சந்தோசத்தோடும், புதிய வாய்ப்புகளும், சம உரிமைகளும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என ஒவ்வொறு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும் போதெல்லாம் மக்கள் நம்பிக்கையோடு புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகிறோம். கடந்த ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வர்தா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த மூன்று மாவட்டத்தில் எப்படி சந்தோசமாக புத்தாண்டை கொண்டாடுவார்கள். பல மாவட்டங்களில் தொழில், விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இன்று 01.01.2017 புத்தாண்டு பிறக்கிறது. இனிமேல் நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்கிற தொலைநோக்கு சிந்தனையோடு, புதியதாய் பிறக்கும் 2017 வருடப்புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்போம், சாதி, மதம், இனம், மொழி, வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூந்துள்ள அவர்களது வாழ்வில் கடவுள் அருள்ளால் இன்றிலிருந்து ஒளிவெள்ளம் ஏற்படட்டும். எனது இதயப்பூர்வமான புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தவாக தலைவர் பண்ருட்டி வேல்முருகன்:

தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வறட்சியையும் இயற்கை பேரிடரையும் ஒருசேர தந்த 2016-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறுகிறது; தமிழகம் இதுவரை கண்டிராத பெரும் வறட்சியை எதிர்கொண்டிருக்கும் சூழல் உதயமாகிறது புத்தாண்டு.

நாடு இதுவரை எதிர்நோக்காத பொருளாதார நெருக்கடியை 2016-ம் ஆண்டு நமக்கு தந்தது. வரும் புதிய ஆண்டிலாவது இத்தகைய நெருக்கடி நீங்கி இயல்பு வாழ்க்கை திரும்பிட வேண்டும்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் மாண்டுபோகும் பெரும் துயரம் 2016-ம் ஆண்டின் இறுதிநாட்களில் அடுத்தடுத்து நடந்தேறுகிறது. இத்துயரம் தோய்ந்த சூழலில் பிறக்கும் புதிய ஆண்டிலாவது தமிழகத்து நதிநீர் உரிமைகள் காப்பாற்றப்பட்டு விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம்.

தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த சிங்கள அரசு அவற்றை அரசு உடைமையாக்கிவிட்டதாக அறிவிப்பு வந்துள்ள நிலையில்தான் புதிய ஆண்டை எதிர்கொள்கிறோம். பிறக்கும் புதிய ஆண்டில் நமது தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை பகுதிகளில் சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தலுமின்றி கடலுக்கு சென்று திரும்பிடும் இயல்பு நிலை உருவாகிட வேண்டும்.

புதிய 2017-ம் ஆண்டில் தமிழகத்தின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க நாம் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என உறுதியேற்போம். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

இதேபோல் அதிமுக பொதுச்செயலராகியுள்ள சசிகலாவின் பெயரிலும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து அறிக்கை வெளியாகி உள்ளது.

English summary
Tamil Nadu chief minister O Panneerselvam and leaders of other political parties have extended New Year greetings to people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X