உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள்.. அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுமாறு அதிமுக எம்எல்ஏக்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

OPS urges ADMK MLAs to be ready for the local body election

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்களுக்கு அவர் அறிவுறுத்தினார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற இருந்த தேர்தல் திமுக தொடர்ந்த வழக்கால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deputy Chief minister O.Paneerselvam urges ADMK MLAs to be ready for the local body election. OPS has said that there is a chance for the localbody election in April month. OPS said this in ADMK MLAs meeting.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X