For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவில் ஓபிஎஸ் இணைவதாக பரபரப்பு... தமிழிசை பதில் என்ன தெரியுமா?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணையப்போவதாகவும், அவருக்கு தமிழக அளவிலான பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் வெளியான தகவல்கள் யூகம் மட்டும்தானே தவிர அதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் பாஜகவில் இணைவதாக வெளியான தகவல் யூகம் மட்டுமே அதில் உண்மை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை, சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

 OPS will become a BJP Leader of Tamilnadu its a rumour says Tamilisai

" கட்சியை பலப்படுத்தும் விதமாக 3 நாள் சுற்றுப் பயணமாக, அமித்ஷா வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தொடர்ந்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.

உணவு பாதுகாப்பு திட்டத்தால் அரிசி கிடைக்காது என்ற தகவல் தவறானது. முன்னாள் முதல்வர் ஓபிஸ் பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவல் வெறும் யூகம் மட்டுமே" என்று அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை முதல் ஓபிஎஸ் பாஜகவில் ஐக்கியமாக ஏற்பாடுகள் நடந்துவருவதாகச் செய்திகள் பரவி வந்தன. அதிமுக அணிகள் இணைய வாய்ப்பு அமையாத சூழல் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் பாஜகவில்தான் இணைவார் என்று டெல்லி வட்டார தகவல்களும் வெளியாகின.

இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், ஓபிஎஸ் பாஜக இணைவது என்பது யூகம் என்று தமிழிசை பதிலளித்துள்ளார்.

English summary
Tamilnadu BJP president Tamilisai said, OPS will become a BJP Leader of Tamilnadu its a rumour .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X