ஓவியாவை ஆதரிங்க.. அதுக்காக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை கேவலப்படுத்துனா எப்படிப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸில் ஓவியாவுக்கு அநீதி ஏற்பட்டால் மெரீனாவில் கூடுவோம் என்ற டுவிட்டர் கருத்து மெரீனா போராட்டத்தையே அசிங்கப்படுத்துவது போல் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஓவியாவை டார்ச்சர் செய்கிறார்கள். இந்த ஷோவைப் பார்த்து பொதுமக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.

இது ஒரு கேம் ஷோ என்பதையும்தாண்டி குட்டையை குழப்புதல், போலித்தனம் செய்தல், பிராடுத்தனம் செய்தல், சூழ்ச்சி, பணத்துக்காக கேவலமான காரியங்கள் செய்தல் உள்ளிட்டவைதான் இதில் இடம்பெறுகிறது. ஒரு சீரியலை விட ரொம்பக் கேவலமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

மக்கள் சீரியஸ்

மக்கள் சீரியஸ்

ஆனால் பொதுமக்கள் இதை சீரியஸாகப் பார்ப்பதோடு சமூக வலைதளங்கிலும் கொந்தளித்துக் குமுறிக் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டுள்ளனர். ஓவியாவுக்குத்தான் பெரும்பாலானோரின் ஆதரவு உள்ளது.

ஜல்லிக்கட்டை ஏன் சீண்டுறீங்க

அது முற்றிப் போய் தற்போது மெரீனா போராட்டம் போல ஓவியா போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்க ஆரம்பித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை கேவலப்படுத்தினால் எப்படிங்க.

இளைஞர்களை கேவலப்படுத்தலாமா

இளைஞர்களை கேவலப்படுத்தலாமா

ஜல்லிக்கட்டு புரட்சி நாட்டையே உலுக்கிய மிகப் பெரிய அறவழி போராட்டம். இது தேசிய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியது. ஒரு வாரமாக இளைஞர்கள் அசராமல் போராடினர்.

கொச்சைப்படுத்தாதீங்க

கொச்சைப்படுத்தாதீங்க

அத்தகைய போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஓவியாவுக்காக மெரீனாவில் கூடுவோம் என்று கூறுவது சரியல்ல. ஓவியாவுக்கு நடப்பது அநீதிதான். அதற்காக ஒரு கேம் ஷோவிற்கு ஜல்லிக்கட்டு போல் மற்றொரு புரட்சியெல்லாம் செய்வது நியாயம் ஆகாது என்பதை ஓவியா ஆதரவாளர்கள் உணர வேண்டும்.

கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டிருக்கு!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Game is a Game. Anyone can raise their voice for Oviya, but noone should insult the Jallikattu protest.
Please Wait while comments are loading...