For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பக்கோடா விற்க சொன்ன மோடி.. ப.சிதம்பரம் பதிலடி கேள்வி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பக்கோடா விற்கலாமே என கூறியதன் மூலம், பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களை இழிவுபடுத்திவிட்டார் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலைவாய்ப்பு பெருகவில்லையே என்ற டிவி சேனல் ஒன்றின்கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த பிரதமர் மோடி, பக்கோடா விற்றால் கூட நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கலாம். அது வேலைவாய்ப்பு இல்லை என்பீர்களா என கூறியுள்ளார்.

'Pakoda' comment: P.Chidambaram tells BJP don't distort on jobs

இதுகுறித்து சிதம்பரம் இன்று வெளியிட்ட டிவிட்டில், பக்கோடா விற்பனை செய்யும் இளைஞர் சுய வேலைவாய்ப்பு கொண்டவர். ஆனால் அவரிடமே நீங்கள் கேட்டுப்பாருங்கள், பாதுகாப்பான ஒரு வேலை வேண்டும் என்றுதான் சொல்வார். வேலைவாய்ப்பு குறித்த விவாதத்தில், வேலை என்பதற்கும் சுயவேலை வாய்ப்பு என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வேலை என்பது வழக்கமாக கிடைக்க கூடியதாகவும், ஓரளவுக்கு பாதுகாப்பானதும் ஆகும். அப்படியான வேலைவாய்ப்புகள் எத்தனை மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்டது என்பதை அறிய விரும்புகிறோம். இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

English summary
"A young man who sells pakodas is honourably self-employed, but poor and aspirational. Ask him and he will tell you that he aspires for a regular and secure job. I empathise with him," tweeted P.Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X