For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் 21ம் தேதியும், தேரோட்டம் 22ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் பங்குனி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா வெள்ளிக்கிழமை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 22-ந்தேதி வரை திருவிழா தொடர்ந்து நடக்கிறது.

Panguni festival begin in Tiruparankundram

திருவிழாவின் முதல் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன், முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான், தெய்வானையுடன் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி அருள்பார்வையில் தங்க முலாம் பூசப்பட்ட 27 அடி உயரமுள்ள கம்பத்திற்கு பால், பன்னீர், இளநீர், புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனையடுத்து மாவிலை, தர்பைபுல், பூமாலை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து 8 மணிக்கு மேளதாளங்கள் முழங்க நாதஸ்வரம் ஒலிக்க கொடி யேற்றப்பட்டது.

அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து கம்பத்திற்கும், சுவாமிக்கும் மகாதீப, தூப, ஆரா தனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலுமாக தெய்வானை யுடன் முருகப் பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகின்ற 17-ந்தேதி (திங்கட்கிழமை) பங்குனி உத்திரமும், 19-ந் தேதி (புதன்கிழமை) பட்டாபிஷேகமும், 20-ந் தேதி (வியாழக்கிழமை) முருகப்பெருமான், தெய் வானை திருக்கல்யாணமும், 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டமும், 22-ந்தேதி (சனிக்கிழமை) தீர்த்த உற்சவமும் நடக்கிறது.

English summary
The famous Panguni festival at Sri Subramanya Swami temple Tiruparankundram begins on march 7. The Celestial wedding would be held on March 21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X