ரிஜிஸ்டர் திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும்.. பதிவுத்துறையின் ரகசிய சுற்றறிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரிஜிஸ்டர் திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும்..வீடியோ

  சென்னை: இனி பதிவு திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும் என்று பதிவுத்துறை ரகசிய சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

  பதிவுத்துறை இயக்குனர் அனைத்து அலுவலகங்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியே தெரிவிக்காமல் இப்படிப்பட்ட மாற்றம் செய்து இருக்கிறது.

  இந்த சட்டம் தமிழகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும், மக்களின் உரிமைகளையும் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

  என்ன தேவை

  என்ன தேவை

  இந்த சுற்றறிக்கையில் படி இருவர் பதிவு திருமணம் செய்து கொள்ள, அவர்கள் பெற்றோர்களின் ஒரிஜினல் அடையாள அட்டை வேண்டும். பின் அந்த அடையாள அட்டை உண்மையா என்று சோதிக்கப்படும். பெற்றோர் இறந்துவிட்டால் இறப்பு சான்றிதழ் தேவைபடும்.

  முன்

  முன்

  இதற்கு முன்பெல்லாம் பெற்றோர் அடையாள அட்டை தேவை இல்லை. திருமணம் செய்பவர்களின் வயது பற்றிய அடையாளமும், சாட்சி கையெழுத்து போடுபவர்களின் அடையாள அட்டையும் இருந்தால் போதும். புதிய சட்டம் காரணமாக அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். இதை சோதனை செய்ய அதிகாரிகள் பெற்றோரை அழைக்க தேவை இருக்கும்.

  சட்டத்திற்கு எதிரானது

  சட்டத்திற்கு எதிரானது

  இந்த சுற்றறிக்கை முழுக்க முழுக்க இந்து திருமண சட்டத்திற்கு எதிரானது ஆகும். இந்து திருமண சட்ட படி திருமண வயது நிரம்பிய இருவர் அவர்களின் அப்பா, அம்மா சம்பந்தம் இன்றி திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் புதிய விதிப்படி அப்படி செய்ய முடியாது.

  பெரிய பிரச்சனை

  பெரிய பிரச்சனை

  இந்த புதிய சுற்றறிக்கை ஜாதி மறுப்பு திருமணத்திற்கு முழுக்க முழுக்க எதிரானது. தமிழகத்தின் அடிப்படை அரசியல் மாற்றத்தையும், சமூக நீதியையும் மோசமாக்கும் சுற்றறிக்கை பலருக்கும் தெரியாமல் அனுப்பப்பட்டு இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The new rule says Parents should allow register marriage in Tamilnadu. It difficult that without parents ID card, the marriage between two adults can't happen.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற