For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

களக்காடு புலிகள் காப்பகத்தில் பார்க்கிங் கட்டணம் வரலாறு காணாத உயர்வு..!

நெல்லை களக்காடு புலிகள் காப்பகத்தில் பார்க்கிங் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் திகைப்பிலும், பீதியிலும் உள்ளனர்.

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

நெல்லை: களக்காடு புலிகள் காப்பகத்தில் பார்க்கிங் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு-முண்டத்துறை புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. முண்டந்துறை வனப்பகுதியில் நான்கு வனச்சரகங்கள் இணைந்துள்ளது. இந்த காப்பகங்களில் 30க்கும் மேற்பட்ட புலிகள் மற்றும் பல்வேறு வகையான வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

parking fees increased in the kalakkadu tiger reserve

இங்குள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் சுற்றுலா எப்போதும் அதிகமாக காணப்படுவர். இவர்களில் பலர் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் வருவது வழக்கம். அப்படி வருபவர்களுக்கு வனத்துறை சோதனை சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். தற்போது இந்த கட்டணம் அதிரடியாக மூன்று மடங்காக உயர்ந்துள்ளதால் பக்தர்கள் திகைப்பில் உள்ளனர்.

அகஸ்தியர் அருவியில் உள்ள கார் பார்கிங்கில் இதுவரை சிறிய வகை கார்களுக்கு ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த தொகை தற்போது ரூ.100 என உயர்ந்தப்பட்டுள்ளது. இதுவே சுற்றுலா பயணிகள் வரும் பெரிய கார், ஜூப்களுக்கு ரூ.500 என்றும், சுற்றுலா பஸ்களுக்கு ரூ.1000 என்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாகவும் இதற்கும், வனத்துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட அதிர்ச்சியை விட அது அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

English summary
Tourists were shocked at the parking fees in the Kalakkadu Tiger reserve.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X