கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன்... பதவி நீக்கம் கோரி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் சாமளாபுரத்தில் டஸ்மாக்கு கடைகளை மூடக் கோரி நடந்த போராட்டத்தில், ஈஸ்வரி என்ற பெண்ணை ஏடிஎஸ்பி அறைந்ததைக் கண்டித்தும் அவரை பதவிநீக்கம் செய்யக் கோரி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

கடந்த வாரம், திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஊர்ப் பொதுமக்களும் பெண்களும் போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கன்னத்தில் பலமாக அறைந்தார்.

 All party protest against Adsp Pandiyarajan in Thiruppur Samalapuram,

அதனால் அப்பெண்ணின் செவித் திறன் பாதிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடெங்கும் பலத்த கண்டனம் எழுந்தது. இந்நிலையில், ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட ஈஸ்வரிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இன்று அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் எங்கும் பாண்டியராஜன் அராஜகத்துக்கு கண்டனக் குரல் எழுப்பப்பட்டபோதும் இதுவரை அவர் மீது துறைரீதியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Thiruppur Samalapuram, All party people protested against Adsp Pandiyarajan, who slapped a woman named Eswari during a protest against TASMAC. They demanded that Adsp should be dismissed.
Please Wait while comments are loading...