அதிமுக அரசுக்கு மக்கள் அளித்த பரிசுதான் ஏற்காடு வெற்றி - சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

People have gifted ADMK govt with win in Yercaud
நெல்லை: இரண்டரை ஆண்டு கால அதிமுக அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் அளித்துள்ள பரிசுதான் ஏற்காடு இடைத் தேர்தல் முடிவு என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில்,

ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஏற்காடு தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்த பின்னரே பெரிய எழுச்சி காணப்பட்டது. இரண்டரை ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் அளித்த பரிசுதான் இது. இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

வட மாநில தேர்தலில் வெற்றி பெறாதது காங்கிரசின் வீழ்ச்சியை காட்டுகிறது. பாரதிய ஜனதா வெற்றி பெற்றாலும் 2 மாநிலங்களிலும் குறைவான இடங்களையே பிடித்துள்ளது. இதனை சிறந்த வெற்றி என்று சொல்லமுடியாது.

பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நெல்லை பொருட்காட்சி திடலில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மாநாடு நடக்கிறது. மாற்றத்தை நோக்கி பயணிக்கும் இளைஞர்கள், பெண்களை சிறந்த முறையில் வழி நடத்தும் வகையில் இந்த மாநாடு அமையும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+