For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் விநாயகர் கோயில் அருகில் கிறிஸ்தவ சமாதி அமைக்க முயற்சி.. மக்கள் எதிர்ப்பு

நெல்லை மணிமூர்த்திஸ்வரத்தில் உச்சிஷ்ட்ட விநாயகர் கோயில் அருகில் கிறிஸ்தவ சமாதி அமைக்க முயற்சி செய்வதை கண்டித்து இரு தரப்பினரும் திரண்டுள்ளதால் பதட்டம் உருவாக்கியுள்ளது.

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மணிமூர்த்திஸ்வரத்தில் உச்சிஷ்ட்ட விநாயகர் கோயில் அருகில் கிறிஸ்தவ சமாதி அமைக்க முயற்சி செய்வதை கண்டித்து இரு தரப்பினரும் திரண்டுள்ளதால் பதட்டம் உருவாக்கியுள்ளது.

நெல்லை மணிமூர்த்திஸ்வரத்தில் உச்சிஷ்ட்ட விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே வண்ணார்பேட்டை சிமினார் ஏஜி சபைக்கு சொந்தமான கல்லறை தோட்டம் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகே சமாதி இருப்பதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

people oppose to build christian graveyard near vinayagar temple in nellai

இந்நிலையில் மாலை ஏஜி சபையை சேர்ந்த ஒரு பெண் இறந்ததை தொடர்ந்து அவரது உடலை கோயிலின் அருகே உள்ள சமாதியில் அடக்கம் செய்ய முயன்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இறந்தவர் உடலை வேறு இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் மீதும் தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு இரவு ஏஜி சபை நி்ர்வாகிகள் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்விபட்ட பாஜகவினரும் அங்கு திரண்டனர். தகவல் அறிந்ததும் தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் சீதாலெட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

அவரிடம் கல்லறை தோட்டம் சேதம் அடைந்திருப்பதாக புகார் தெரிவித்தனர். கல்லறை தோட்டம் தொடர்பாக ஆர்டி ஓ விசாரணை நடப்பதால் அங்கு யாரும் செல்ல கூடாது என போலீசார் எச்சரித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் இருதரப்பினரும் மோதி கொள்ளும் சூழல் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
People oppose to build Christian graveyard near Vinayagar Temple in Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X