சென்னை மழை, வெள்ளம்.. கமல் தீர்க்கதரிசிதாம்ப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று காலையில் இருந்து கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் "கடும் மழையிலும் காமெடி செய்யும் சங்கம்" என டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் சிலர் காமெடியாக எழுதி வருகின்றனர். அதிலும் அரசியல்வாதிகள் பலரை கிண்டல் செய்து நிறைய போஸ்டர்களை எழுதி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதற்காக 'மழை', 'சென்னை' என்ற ஹேஷ்டேக்கை வேறு உருவாக்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தொடங்கியது மழை

தொடங்கியது மழை

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஒருவாரத்திற்கு முன்பு தொடங்க வேண்டிய மழை கொஞ்சம் தாமதமாக தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து சென்னையில் நேற்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிறைய பேர் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 மழை ஹேஸ்டேக்

மழை ஹேஸ்டேக்

இந்த நிலையில் டிவிட்டரில் மழை, சென்னை, சென்னை ரெயின் என நிறைய ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டது. முதலில் மழை குறித்த தகவல்கள் தெரிவிக்க உருவாக்கப்பட்ட இந்த டேக் இப்போது மழை காமெடிகளாலும் நிரம்பி வழிகிறது. நிறைய பேர் தங்கள் சோகத்தையும், கஷ்டத்தையும் இதில் காமெடியாக எழுதி வருகின்றனர். இந்த போஸ்டுகள் எல்லாம் வைரல் ஆகி வருகிறது.

கமல் தீர்க்கதரிசி

இந்த நிலையில் கமல் இரண்டு நாட்களுக்கு முன்பு சாம்பல்குளம், எண்ணூர் பகுதி துறைமுகங்களை பார்வையிட்டார். தற்போது கமல் பற்றியும், சென்னையில் தற்போது பெய்யும் மழை பற்றியும் இவர் எழுதி இருக்கிறார். அதில் ''கமல் ஒரு தீர்க்கதரிசி அதான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்து ஏரியை பார்த்துட்டு போய் இருக்கார்ன்னு'' எழுதியிருக்கிறார்.

நானும் தூத்துக்குடிகாரன் தான்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்யாதது குறித்து வருத்தமாகவும் காமெடியாகவும் எழுதியிருக்கிறார். சென்னை மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல சொன்னதற்கு பதிலாக இவர் " பாதுகாப்பான இடம்னா அது தூத்துக்குடி தான் அங்கதான் மழையே பெய்யாது'' என எழுதியிருக்கிறார்

திருச்சில மழையே இல்லையே

இந்த நிலையில் இவரைப்போலவே திருச்சியிலும் மழை இல்லை என்பதை வருத்தத்துடன் காமெடியாக பதிவு செய்து இருக்கிறார் இவர். 'பாயசம் எங்கடா' என்ற காமெடி வசனத்தை போட்டு ''திருச்சில மழை எங்கடா'' என்று கேட்டு இருக்கிறார்.

எல்லா திசையும் ஆபத்துதான்

தஞ்சாவூரில் மிகவும் அதிக அளவில் கனமழை பெய்து வருவதால் இவர் இப்படி எழுதி இருக்கிறார். அதில் "நீங்க வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்குன்னு எந்த திசைக்கு சென்றாலும் பிரச்சனை தான்'' என்று கூறி பாதுகாப்பாக இருக்க கூறியிருக்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain started again in Chennai and many other places in Tamilnadu. People in social media commenting sarcasticly about the rain.
Please Wait while comments are loading...