For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுடுகாட்டில் நள்ளிரவில் பெண்கள், குழந்தைகள் சகிதமாக குடும்ப செல்பி எடுக்கும் 'பெரியாரிஸ்டுகள்'!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: 'கடவுளும் இல்லை; பேயும் இல்லை' என்ற முழக்கத்தை முன்வைத்து ஒருசில பெரியாரிஸ்டுகள் தொடங்கிய 'செல்பி' முயற்சி தற்போது ஒரு இயக்கமாக உருவெடுத்துள்ளது. பிஞ்சுக் குழந்தைகள், குடும்பத்தினர் சகிதமாக ஏதோ சுற்றுலா செல்வது போல நள்ளிரவுக்கு சிக்கன், மட்டன் சகிதம் சுடுகாட்டுக்குச் சென்று மயானத்தில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு 'கடவுளும் இல்லை பேயும் இல்லை' என்ற பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.

கோவை பகுதியைச் சேர்ந்த திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர் முதல் முதலாக 'செல்பி வித் பேய்' என நள்ளிரவில் சுடுகாட்டுப் போய் ' கடவுளும் இல்லை பேயும் இல்லை' என்று செல்பி எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைப் பின்பற்றி தமிழகத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பெரியாரிஸ்டுகள் அடுத்தடுத்து மாட்டுக்கறி பிரியாணி, கேக்குகள் சகிதம் சுடுகாட்டுக்குப் படையெடுத்து செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

தற்போது சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரியாரிஸ்டுகளும் சுடுகாட்டு செல்பிக்குள் களமிறங்கி 'கடவுளும் இல்லை பேயும் இல்லை' என்ற முழக்கத்தில் இணைந்துள்ளனர்.

மல்லிகைப் பூவும் மாயமோகினியும்

மல்லிகைப் பூவும் மாயமோகினியும்

கு.செல்வேந்திரன் என்கிற திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இளைஞர் தமது முக நூல் பக்கத்தில்,

‪#‎சுடுகாட்டு_Selfie_Challenge‬
‪#‎No_God_No_Ghost‬

மல்லிகை பூ இங்கே மாயமோகினி எங்கே...?
கறியும் சோறும் இங்கே காட்டேரி எங்கே...?
கன்னி பையன் இங்கே கன்னி பேய் எங்கே....?

என்ற பதிவுடன் சமாதி ஒன்றின் மேல் அமர்ந்து கையில் மல்லிகைப் பூவையும் வாயில் மாட்டுக்கறியையும் வைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

குழந்தைகளுடன்..........

குழந்தைகளுடன்..........

இதேபோல் SP Rajendran என்ற பெரியாரிஸ்ட் தமது முகநூல் பக்கத்தில்,

வாண்டுகளுடன் ஒரே கெலாட்டா.....‪#‎சுடுகாட்டில்‬ ........சிக்கன் 65 .....கேழ்வரகு புட்டு....சாப்பாடு அங்கேயே குடும்பத்துடன் சாப்பிட்டோம். டான்ஸ் வீடியோ பிறகு பதிவு செய்கிறேன் தோழர்களே! என போட்டுள்ளார்.

அத்துடன் 2 பெண் குழந்தைகளுடன் சுடுகாட்டில் நள்ளிரவில் ஆடிப்பாடிய காட்சிகளையும் படமாக்கி பதிவு செய்துள்ளார்.

7 வயது சிறுவன்...

7 வயது சிறுவன்...

தி.வி.க மல்லசமுத்திரம் என்பவர்,

"ஏப்பா ...கடவுளே இல்லை, அப்புறம் பேய் எங்க இருக்கபோவுது"...... மல்லசமுத்திரம் சுடுகாட்டில் பெரியார் விழுது "கபிலன் கார்க்கி"(வயது-7).." என்ற பதிவுடன் 7 வயது மகன் நடு இரவில் சுடுகாட்டில் இருக்கும் காட்சியை படமாக்கியுள்ளார்.

முதல் பெண்...

முதல் பெண்...

Veera Karthik என்ற பெரியாரிஸ்ட் தமது முக நூல் பக்கத்தில்,

சுடுகாட்டு செல்ஃபி போட்டியில்
ஒரு பெண்!
ஆர்த்தி நட்பினியா
வீட்ல ஒரு பொணம் விழுந்தா
சுடுகாட்டுப்பக்கம் போகாம வீதி மூலையோட நின்னு அழுதுட்டு வந்துடனும்!
ஆனா
அந்த சடங்குகள முறியடிச்சு
நள்ளிரவுல தன்னந்தனியா போயி பிணம் எரிக்கற , புதைத்த இடத்துல உட்காந்து செல்ஃபி எடுக்கற தைரியத்த பாராட்டியே ஆகனும்!
இடம் : பூந்தமல்லி நசரத்பேட்டை.
ஒழிக மூடநம்பிக்கை!
வளர்க பகுத்தறிவு!

என்று பதிவு செய்துள்ளதுடன் சுடுகாட்டில் ஆர்த்தி நட்பினியா இருக்கும் படங்களையும் பதிவு செய்துள்ளார்.

English summary
Periyarists made "Selfie_Challenge'' to a big movement agains God and Ghost
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X