"வெடித்து" விளையாடும் சேலம் திமுகவினர்.. மாஜி எம்.பி. செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
சேலம் திமுகவில் உட்கட்சி மோதலின் உச்சகட்டமாக செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
சேலம்: திமுக உட்கட்சி மோதலின் உச்சகட்டமாக சேலத்தில் முன்னாள் எம்.பி. செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் திமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு நிற்கிறது. மறைந்த வீரபாண்டியார் மகன் ராஜாவுக்கு திமுக தலைமை முக்கியத்துவம் தரவில்லை. பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்குதான் திமுக தலைமை முக்கியத்துவம் அளித்தது.

தற்போது வீரபாண்டி ராஜா, பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் கோஷ்டிகளிடையே உக்கிர மோதல் நடைபெற்று வருகிறது. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.பி. செல்வகணபதியை முன்னிறுத்தும் பணிகளை ராஜா செய்து வருகிறார்.
இந்நிலையில் திமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் இருதரப்பும் அரிவாளால் வெட்டிக் கொண்ட பயங்கரம் நேற்று காலை நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இதில் செல்வகணபதி வீட்டில் இருந்த கார், இருசக்கர வாகனம் தீ பிடித்து எரிந்தன. பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆதரவாளர்களே இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்பது செல்வகணபதி தரப்பின் குற்றச்சாட்டு.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications