For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ்ல மட்டுமில்ல டூ வீலர்ல போறவங்களுக்கும் டென்ஷன்... பெட்ரோல் விலை ரூ. 75.12!

டீசல் விலையில் வரலாற்றின் உச்சத்தை தொட்ட நிலையில் மூன்றரை ஆண்டுகளுக்கு பின் பெட்ரோல் விலையும் தொடர்ந்து ரூ. 75ஐ தாண்டி வருகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    பஸ்ல மட்டுமில்ல டூ வீலர்ல போறவங்களுக்கும் டென்ஷன்..வீடியோ

    சென்னை: வரலாற்றிலேயே முதன்முறையாக டீசல் விலை உச்சத்தை அடைந்த நிலையில் மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ. 75.12 காசுகளை எட்டிவிட்டது.

    கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்தது. மாதத்திற்கு 2 முறை விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளித்த போது கடைசியாக பெட்ரோலின் விலை ரூ. 68.02ஆகவும், டீசலின் விலை ரூ. 57.41 ஆகவும் இருந்தது.

    தினசரி விலை நிர்ணயம் செய்வதால் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அதன் பலன் உடனடியாக மக்களுக்கு வந்து சேரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த பாசாங்கெல்லாம் பளிக்கவே இல்லை தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யத் தொடங்கியது முதல் விர் ரென ராக்கெட்டில் ஏறிச் சென்று கொண்டு தான் இருக்கிறது பெட்ரோல், டீசல் விலை.

    விலை உயர்வு

    விலை உயர்வு

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து மக்கள் நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் கலால் வரியாக பெட்ரோல், டீசல் மீதான ரூ. 2ஐ குறைத்தது மத்திய அரசு. எனினும் உச்சத்துக்கு சென்று கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலையானது மக்கள் கழுத்தை நெரித்து வருகிறது.

    விலை உயர்வு

    விலை உயர்வு

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து மக்கள் நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் கலால் வரியாக பெட்ரோல், டீசல் மீதான ரூ. 2ஐ குறைத்தது மத்திய அரசு. எனினும் உச்சத்துக்கு சென்று கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலையானது மக்கள் கழுத்தை நெரித்து வருகிறது.

    டீசலின் விலையும் புதிய உச்சம்

    டீசலின் விலையும் புதிய உச்சம்

    மாநில அரசுகள் தான் இனி வரி குறைப்பு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு பிரச்னையை திசை திருப்பி விட்டது. சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 75.12ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 66.84 ஆகவும் இருக்கிறது.

    மூன்றரை ஆண்டுக்குப் பிறகு உச்சம்

    மூன்றரை ஆண்டுக்குப் பிறகு உச்சம்

    2014ம் ஆண்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.78 ஆக இருந்தது. மூன்றரை ஆண்டுகளுக்கு பின், தற்போது, மீண்டும் பெட்ரோல் விலை, 75 ரூபாயை தாண்டி உள்ளது.

    போக்குவரத்துக்கு சிரமம்

    போக்குவரத்துக்கு சிரமம்

    இருப்பினும் 2013 செப்டம்பரில் இருந்த உச்ச விலையான ரூ.79.55ஐ இன்னும் தாண்டவில்லை என்று சற்றே நிம்மதியடையலாம். இரு சக்கர வாகனத்தை விட்டு பேருந்தில் பயணிக்கலாம் என்றால் இரட்டிப்பாகியுள்ள பஸ் கட்டணம் ஒரு பக்கம் மக்களை வாட்ட மற்றொரு புறம் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையென மக்களின் அன்றாட போக்குவரத்தே ஆடம்பரமான விஷயமாக மாறி இருக்கிறது.

    English summary
    Petrol rate at Chennai reaches three and half years high of Rs.75. 12 and diesel also reach a new high of Rs. 66.84,the increased rates itself turned the daily transporters life as a luxurious one.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X