For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை தடை செய்யக் கோரி வழக்கு!

By Mathi
Google Oneindia Tamil News

மதுரை: பிராமணர்களை எதிர்த்து பிரசாரம் செய்து வரும் கி. வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம், கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவற்றை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவை பிராமணர் சமூகத்துக்கு எதிராகவும், பிராமணர்களை அவதூறாகவும் தொடர்ந்து பேசி வருகின்றன.

2012-ம் ஆண்டு திருவானைக்காவலில் நடந்த பொதுக்கூட்டத்தில் வர்ணாசிரமத்தை அனுமதிக்க மாட்டோம்; வர்ணாசிரமத்துக்கு எதிரான போராட்டம் வன்முறை அல்லாத ஒன்றாக இருக்காது என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசி உள்ளார்.

பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது சமூகத்தின் பெயரில் கடைகள், பள்ளிகள் போன்றவற்றை வைத்துள்ளனர். அப்படி இருக்கும் போது, பிராமணாள் கபே என்று இருப்பதில் என்ன தவறு உள்ளது?.

அகத்தியர், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், சுப்பிரமணிய பாரதி, ராமானுஜர் போன்றவர்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள், ஜாதி வேறுபாடு களை களையவும், சமூக சீர்திருத்தங்களுக் காகவும் பாடுபட்டு உள் ளனர்.

தனிமனித சுதந்திரத்துக்கு எதிராகவும், சமூக நல்லிணக்கம், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் திராவிடர் கழகம், பிராமணர் சமூகத்தினரை தொடர்ந்து அவ தூறாக பேசி வருவது நியாயமற்றது.

பிராமணர்களுக்கு எதிராகவும், அவதூறாகவும் பேசுகிற திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இம்மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெறுகிறது.

English summary
A petition seeking to proscribe Tamil Nadu's social respect movement outfit Dravidar Kazhagam (DK) and its offshoot Thanthai Periyar Dravidar Kazhagam (TPDK) for hurting the sentiments of the Brahmins is being heard by the Madras High Court's Madurai Bench.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X