கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறை வேற்றுங்கள்... பாண்டவர் அணிக்கு சூர்யா வாழ்த்து
சென்னை: கடமைகளை, உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள். மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள். கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறைவேற்றுங்கள். என்று நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியில் சார்பில் போட்டியிட்ட நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் அனைவருமே வெற்றி பெற்றனர். தேர்தல் முடிந்த நிலையிலும் கருத்து மோதல்கள் நின்றபாடில்லை. இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தனி மனிதத் தாக்குதல்
சூர்யா எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார், அதில், இந்தத் தேர்தல் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில், வருந்ததக்க பல விஷயங்கள் அரங்கேறின. விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனித தாக்குதல் நடந்தன. சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன.

ஜாதிய பிரிவினை
பொறுப்பில் இருக்கும்போது செய்த 'கடமைகள்', 'உதவிகளாக' சித்தரிக்கப்பட்டன. 'நடிகர்கள் ஒரே குடும்பம்' என்று சொல்லிக் கொண்டே ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது. படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து கேலி செய்தனர். விருப்பப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞர்கள் மீது, 'பண்பு மறந்து, வார்த்தை தடித்து' அவதூறுகள் வீசப்பட்டன. இத்தகைய சூழல் இனி ஒருபோதும் வராமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு.
கடமையைச் செய்யுங்கள்
வெற்றி பெற்ற புதிய பொறுப்பாளர்களுக்கு, சக கலைஞனாக என்னுடைய வேண்டுகோள், கடமைகளை, உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள். மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள். அனைத்து கலைஞர்களுக்கு நன்மை கிடைக்க பாடுபடுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறைவேற்றுங்கள்.
உண்மையான வெற்றி
பகைமை விரட்டி, ஒற்றுமைக்கு வித்திடுங்கள். சககலைஞர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே, உங்களின் உண்மையான வெற்றி, நடிகர்கள் மற்றும் திரைத்துறையின் வளர்ச்சிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் சூர்யா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications