எண்ணூர் துறைமுகம் அருகே சமையல் எரிவாயு கப்பல் மீது மோதிய கத்தார் கப்பல் மீது வழக்குப்பதிவு
எண்ணூர் துறைமுகம் அருகே சமையல் எரிவாயு கப்பல் மீது மோதிய கத்தாரின் டான் காஞ்சிபுரம் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துறைமுக பொதுமெலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளான வழக்கில் கத்தாரின் டான் காஞ்சிபுரம் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பிரிவுகளின் கீழ் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 28ஆம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மாப்பிள் என்ற கப்பலும் மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த காஞ்சிபுரம் டான் என்ற கப்பலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் 2 கப்பல்களும் பெரும் சேதமடைந்தன.

இந்த விபத்தால் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து கசிந்த கச்சா எண்ணெய் கடற்பரப்பில் பரவியது. எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவிய எண்ணெய் படலத்தால் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் பரவியுள்ள எண்ணெய்யை அகற்றும் பணி 8வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
இந்நிலையில் மேப்பிள் கப்பல் மீது மோதிய டான் காஞ்சிபுரம் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுக மேலாளர் குப்தா அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் கத்தார் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியது, விபத்தை ஏற்படுத்தி கடல் மாசுபாட்டை ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications