பெண் குழந்தையை ரூ.2.5 லட்சத்திற்கு விற்ற தந்தை உள்பட 6 பேர் கைது
கோவை: 1 வயது பெண் குழந்தையை ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் உள்ள சவுரிபாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமன்(28). அவரது மனைவி மீனா(23). அவர்களுக்கு 5, 3 மற்றும் 1 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ராமன் தனது மனைவிக்கு தெரியாமல் ஒரு வயது குழந்தை ஷாலினியை விற்றுவிட்டு அது காணாமல் போய்விட்டதாக தெரிவித்தார்.

கணவர் மீது சந்தேகம் அடைந்த மீனா இது பற்றி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் ராமனை பிடித்து விசாரித்தபோது அவர் கோவையைச் சேர்ந்த புரோக்கர் குமாரசாமி மூலம் குமரி மாவட்டம் பருத்திவிளையைச் சேர்ந்த புரோக்கர் தங்கசாமியிடம் குழந்தையை விற்றது தெரிய வந்தது.
தங்கசாமி ஆற்றூரை சேர்ந்த நர்ஸ் ரீட்டா(35) மூலம் குழந்தையை தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த விஜயகுமார்(42), ராணி பிரபா(38) தம்பதிக்கு ரூ.2.5 லட்சத்திற்கு விற்றுள்ளார்.
புரோக்கர்களின் திட்டப்படி ராமன் தனது மனைவி குழந்தைகளை கன்னியாகுமரிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை விற்றுவிட்டு தொலைந்துவிட்டதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். மீனா கன்னியாகுமரி காவல் நிலையத்தில் குழந்தை காணாமல் போனதாக புகார் அளித்துவிட்டு கோவைக்கு வந்துள்ளார்.
ஊர் வந்த பிறகு ராமன் கையில் நிறைய பணம் இருந்துள்ளது. ஒரு நாள் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராமன் குழந்தையை விற்றுவிட்டதாக உளறியுள்ளார். இதையடுத்து தான் மீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமன் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத விஜயகுமார், ராணி தம்பதிக்கு நர்ஸ் ரீட்டாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு குழந்தையை வாங்கிக் கொடுத்தால் நிறைய பணம் பார்க்கலாம் என்று ரீட்டா நினைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications