கோவை கார் வெடிப்பு: நெல்லை மேலப்பாளையத்தை கனெக்ட் செய்த போலீஸ்! விசாரணை வளையத்தில் மதகுரு.. பரபரப்பு
நெல்லை : கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லையில் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமடைந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு என போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லையில் முகமது உசேன் லெப்பை என்பவரிடம் இன்று போலீசார் விசாரணை மேற்கொண்டு, அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

ஊபா சட்டத்தில்
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்.ஐ.ஏ விசாரணை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கார் வெடிப்பு வழக்கில் 6வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கார் வெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொள்ள அதிகாரப்பூர்வ ஆணை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

கோவையில் இறங்கிய வந்தனா
நேற்றே தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து, கோவையில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வழக்கின் விபரங்கள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். கோவையில் என்ஐஏ அதிகாரிகளிடம் டிஜிபி சைலேந்திரபாபு இன்று ஆலோசனை நடத்தினார்.

முகமது உசேன் லெப்பை
இந்நிலையில், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லையில் முகமது உசேன் என்பவரிடம் நெல்லை மேலப்பளையம் காவல்நிலையத்தில் வைத்து நெல்லை மாநகர துணை ஆணையர் அனிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முகமது உசேன் லெப்பை என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவைக்கு அடிக்கடி பயணம்?
முகமது உசேன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையில் மதரஸா பள்ளியை நடத்தி வந்துள்ளார். தற்போது கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இப்போதும் அடிக்கடி கோவை சென்று வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் நெல்லை மாநகர போலீசார் முகமது உசேன் வீட்டில் சோதனை நடத்திய பிறகு காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 3 மணி நேரம் நீண்டது இந்த விசாரணை. இதனிடையே அவரது வீட்டில் இருந்த ஆவணங்கள், பென் டிரைவ் மற்றும் சில பொருட்கள் கைப்பற்ற பட்டுள்ளன. அவை தடய அறிவியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications