மானாமதுரை: சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய மணல் கடத்தல் கும்பல்- போலீஸ் துப்பாக்கிச் சூடு
மானாமதுரை: மானாமதுரை அருகே சட்டவிரோதமாக செம்மண் அள்ளியதை தடுத்த எஸ்ஐ யை கடத்தல்காரர்கள் தாக்க முயன்றனர். இதனையடுத்து துப்பாக்கிச்சுசூடு நடத்தி எஸ்ஐ உயிர் தப்பினார்.
ராமநாதபுர மாவட்ட எல்லையில் தெ.புதுக்கோட்டை அருகே செம்மண் குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்த செம்மண் குவாரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வந்த தகவலையடுத்து எஸ்,ஐ முத்துகிருஷ்ணன், 3 போலீசார், இரண்டு பிரண்ட்ஸ் ஆப்போலீஸ், ஒரு ஊர்காவல்படை வீரர் என மொத்தம் ஏழு பேர் ரோந்து சென்றனர்.

சிவகங்கை மாவட்ட எல்லையில் செம்மண் அள்ளி அதனை ராமநாதபுர மாவட்ட எல்லைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மணலை விற்பனை செய்ய கொண்டு சென்றுள்ளனர். அங்கு நேரில் சென்று எஸ்ஐ முத்துகிருஷ்ணன் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது பொக்லைன் இயந்திரம், நான்கு டாரஸ் லாரி, ஒரு அரைபாடி லாரி ஆகியவற்றில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து எஸ்ஐயை தள்ளி விட்டுள்ளனர்.
கீழே விழுந்த எஸ்ஐ எழுந்து செல்போனில் சக போலீசாரை தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனையும் பறித்து அடித்து உதைத்துள்ளனர். பலத்த காயமடைந்த எஸ்ஐ உயிர் தப்பிக்க எண்ணி துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி எஸ்ஐ இரண்டு ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தினார்.
துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கவும் கடத்தல்காரர்கள் இருட்டில் தப்பியோடி விட்டனர். சிவகங்கை எஸ்பி பயிற்சியில் இருப்பதால் ராமநாதபுர எஸ்பி(பொறுப்பு) மயில்வாகனன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். காயமடைந்த எஸ்ஐ முத்துகிருஷ்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிவகங்கை மாவட்ட எல்லையில் தொடர்ந்து மணல்அள்ளியுள்ளனர். அதனால் பல இடங்களில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் சராமாரியாக மணல் அள்ளி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
ராமநாதபுர மாவட்ட எல்லையை தாண்டி சிவகங்கை மாவட்டத்திலும் அள்ளி விற்பனை செய்துள்ளார். இரு மாவட்ட எல்லையும் சந்திக்கும் இடம் என்பதால் வருவாய்த்துறை, போலீசார் என இரு தரப்பினரையும் ஏமாற்ற தொடர்ந்து மணல் அள்ளியதாக தெரிகிறது.
சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருவாய்துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தல் இருந்து நான்கு டாரஸ் லாரிகள், ஒரு அரைபாடி லாரி, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications