For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை: ராதாபுரத்தில் கருணாநிதி பெற்றோர் சிலைகளுக்கு பாதுகாப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லைமாவட்டம் ராதாபுரத்தில் உள்ள கருணாநிதியின் பெற்றோர் சிலையை உடைக்க அ.தி.மு.க.வினர் முயற்சி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து சிலைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிலையை உடைக்க முயற்சி செய்ததாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிக்கு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

Police security to Karunanhdi's parents' statues

இந்த வழக்கில் நால்வருக்கும் நான்காண்டுகள் சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம், ராதாபுரம் பஸ் நிலையத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெற்றோர் முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் சிலையை சனிக்கிழமையன்று சிலர் உடைக்க அ.தி.மு.க.வினர் முயற்சி செய்தனர்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சிலையை உடைக்க முயன்ற அ.தி.மு.க.வினர் 15 பேரை கைது செய்தனர்.

ராதாபுரத்தில் அதிமுக சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடைப்பெற்றது.அப்போது திடீரென கருணாநிதியின் பெற்றோர் சிலையை அதிமுகவினர் உடைக்க போவதாக வதந்தி நிலவியது.

போலீஸ் பாதுகாப்பு

அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக சிலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுக் காப்பு போடப்பட்டது. மாலை 5.10 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்து கொண்டு சிலை வழியாக அதிமுக தொண்டர்கள் செல்லும் வரை அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

English summary
Police have police protection to the statues of Karunanidhi's parents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X