For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் போராட்டக்குழுத் தலைவரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ்.. கைது செய்ய வாய்ப்பு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுத் தலைவர் மகேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியை தேர்ந்த இசக்கிதுரையை இருவரையும் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுத் தலைவர் மகேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியை தேர்ந்த இசக்கிதுரையை இருவரையும் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

Police took two people for investigation who lead the Sterlite protest in Tuticorin

இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். இன்னும் 30 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காணாமல் போன பலர் இன்னும் வீடு வந்து சேரவில்லை.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீஸ் பலரை விசாரித்து வருகிறது. போராட்டக்காரர்கள் என்று கூறி போலீஸ் பலரை கைது செய்கிறது. இரவோடு இரவாக வீடு புகுந்து போலீஸ் விசாரணை நடத்துவது நடந்து வருகிறது.

தற்போது ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுத் தலைவர் மகேஷை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளது. அவரை கைது செய்யாமல் விசாரணை என்று மட்டும் கூறி அழைத்து சென்றுள்ளது.மகேஷை போலீஸ் வீடு புகுந்து அழைத்து சென்றது.

அதேபோல் போராட்டத்தை ஒருங்கிணைத்த நாம் தமிழர் கட்சியை தேர்ந்த இசக்கிதுரையையும் அழைத்து சென்றது.மகேஷ், இசக்கிதுரையை ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் விசாரணை செய்து வருகிறது. இருவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

English summary
Police took two people for investigation who lead the Sterlite protest in Tuticorin. They have taken Isakki Durai and Mahesh for investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X