அரசியலுக்கு வரட்டும்... மக்கள் துன்பப்படும் போது கமல் எங்கிருந்தாருங்க? தமிழிசை கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் துன்பப்படும் போது கமல் களத்தில் இறங்கி போராடினாரா என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

நடிகர் கமல்ஹாசனின் அரசியலுக்கு வந்து விட்டேன் என்பதை தெரிவிக்கும் டுவீட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன், முத்தரசன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Politicians comment on Kamal's tweet

பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறுகையில், ஊழலுக்கு எதிராக கமல் குரல் கொடுப்பதை வரவேற்கிறோம். மேலும் மக்கள் துன்பப்படும்போது கமல் களத்தில் இறங்கி போராடினாரா என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில் கமலை அமைச்சர்கள் விமர்சிப்பது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.

Kamal Hassan Ready to do Anything money Says CV Shanmugam-Oneindia Tamil

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கமல் அரசியலுக்கு வர முழு உரிமை உண்டு; அவர் அரசியலுக்கு வந்த பின்னர் அவரது போராட்டங்கள் பற்றி பேசலாம் என கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilisai asks Kamal Hassan that when people faces trouble in the past days where was Kamal?
Please Wait while comments are loading...