பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளி வீராச்சாமி மீதான திருட்டு வழக்குகள்- நாளை தீர்ப்பு
கோவை: பொள்ளாச்சி விடுதியில் நடைபெற்ற சிறுமிகளின் பலாத்கார சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வீராச்சாமியின் மீதான திருட்டு வழக்குகளின் விசாரணை நாளை நடைபெற உள்ளது.
பொள்ளாச்சியின் பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு சொந்தமான விடுதியில் கடந்த மாதம் 11 ஆம் தேதி அன்று இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இச்சம்பவத்தில் வால்பாறையைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின்கீழ் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்தான் வீராச்சாமி மீது திருட்டு வழக்குகளும் பதிவாகி உள்ளன. கவர்க்கல் எஸ்டேட் திருட்டு, டாஸ்மாக் கொள்ளை ஆகிய வழக்குகளில் இவர் சம்பந்தப் பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்குகள் மீதான நேற்றைய விசாரணையில், நீதிபதி ராஜ்மோகனிடம் வீராச்சாமி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதன் தீர்ப்பானது நாளை வழங்கப்படும் என்று நீதிபதி ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications