பழைய வண்ணாரப்பேட்டையில் ரிப்பேரான வாக்கு பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் ரெடி!
பழைய வண்ணாரப்பேட்டையில் வாக்கு பதிவு கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதானது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்கே நகருக்கு இன்று வாக்கு பதிவு நடைபெறும் நிலையில் பழைய வண்ணாரப்பேட்டையில் வாக்கு பதிவு இயந்திரம் பழுதானது கண்டுப்பிடிக்கப்பட்டு அதை அதிகாரிகள் சரி செய்தனர்.
ஆர்கே நகருக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. பணப்புகாருக்கு மத்தியில் இந்த தேர்தல் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி கடந்த இரு தினங்களாக தேர்தல் ஏற்பாடு நடைபெற்று வந்தன.

காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்னர் மாதிரி வாக்கு பதிவு நடத்தப்பட்டது. அப்போது பழைய வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அந்த இயந்திரம் பழுதானதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து அதை அதிகாரிகள் சரி செய்து விட்டனர்.












Click it and Unblock the Notifications