குஜராத்,ஹிமாச்சலில் வெற்றி: மக்கள் மீண்டும் அங்கீகாரம் கொடுத்துள்ளதாக பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டு!
குஜராத், ஹிமாச்சல் பிரதேசங்களில் பாஜக ஆட்சியமைக்கவுள்ளதை அடுத்து மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: குஜராத், ஹிமாச்சல் பிரதேசங்களில் பாஜக ஆட்சியமைக்கவுள்ளதை அடுத்து மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளது. இருமாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைக்கிறது.

பாஜக வெற்றி குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாஜக வெற்றி குறித்து டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில் இருமாநிலங்களிலும் பாஜக இமாலய வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இமாலய வெற்றி! பிரதமர் திரு @narendramodi அவர்களின் முன்னேற்ற திட்டங்களுக்கு மீண்டும் அங்கீகாரம் கொடுத்துள்ள #குஜராத் #இமாச்சலப்பிரதேச மக்களுக்கு பாராட்டுக்கள். இந்தியாவை உலகில் முதல்நிலை நாடாக மாற்ற பெரும் முயற்சி தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிரதரமரின் கரத்தை (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 18, 2017
பிரதமர் மோடியின் முன்னேற்ற திட்டங்களுக்கு மீண்டும் அங்கீகாரம் கொடுத்துள்ள #குஜராத் #இமாச்சலப்பிரதேச மக்களுக்கு பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவை உலகில் முதல்நிலை நாடாக மாற்ற பெரும் முயற்சி தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிரதரமரின் கரத்தைவலுப்படுத்த அவருடன் 130 கோடி மக்களும் கைகோர்த்து பயணிப்பதில் பெறுமை கொள்வோம் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வலுப்படுத்த அவருடன் 130 கோடி மக்களும் கைகோர்த்து பயணிப்பதில் பெறுமை கொள்வோம். பிரதமருக்கு எனது சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும் வாழ்த்துக்கள்.
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 18, 2017
பிரதமருக்கு தனது சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும் வாழ்த்துக்கள் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications