ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கூட்டணி - குற்றம் சாட்டும் பொன். ராதாகிருஷ்ணன் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கூட்டணி - குற்றம் சாட்டும் பொன். ராதாகிருஷ்ணன்-வீடியோ

சேலம்: தமிழகத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மறைமுக கூட்டு உள்ளது என்று சந்தேகிக்கிறேன் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2014ல் தீபாவளி பண்டிகையின் போது நாடு முழுக்க சீனா பட்டாசுகள் தான் இருந்தன. அப்போது சீன பட்டாசுகளை எல்லா இடங்களிலும் பரவ வைத்த பெருமை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தையே சாரும்.

Pon.Radhakrishnan interview in Salem

அதன்பிறகு இது ஆளும் பாஜக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட போது சீன பட்டாசுகள் இல்லாத நிலையை உருவாக்கினோம். கடந்த மூன்று ஆண்டுகளாக சீன பட்டாசு தடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடமும் நிச்சயம் அது தடுக்கப்படும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அருமையை உணரும் சூழ்நிலை உருவாகிக்கொண்டுள்ளது. எதிர்க்கட்சி செயல்படுகிறதா என்பதே தெரியவில்லை. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மறைமுகக் கூட்டு இருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்த சந்தேகம் ஆளும் அரசும் எதிர்க்கட்சியும் நடந்து கொள்ளும் முறையை பார்த்தும் எனக்குத் தோன்றுகிறது. இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MoS Pon. Radhakrishnan blamed that ruling party and opposite party of Tamilnadu have indirect agreement.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற