தமிழகத்தில் விரும்பியபடி கூட்டணி... திருப்பதியில் மொட்டை போட்ட பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: லோக்சபா தேர்தலில் விரும்பிய கூட்டணி அமைந்ததால், திருப்பதி கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதையடுத்து தமிழகத்தில் விரும்பியபடி கூட்டணி அமைந்தால் முடி காணிக்கை செலுத்துவதாக திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டுதல் செய்திருந்தாராம் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது பாஜக.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு கட்சி நிர்வாகிகளுடன் காரில் திருப்பதி புறப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் . நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார்.
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
தமிழகத்தில் வெற்றிக்கூட்டணியை அமைத்துள்ளோம். அதற்காக திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தேன். லோக்சபா தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம். நாளை முதல் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications