தாமரையின் ஆட்சியை தமிழகம் காண தமிழ் புத்தாண்டு வாழ்த்து - பொன். ராதாகிருஷ்ணன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்தியுள்ளார். தாமரையின் ஆட்சியை தமிழகம் கண்டிட மோடியின் வளர்ச்சி வேகத்துக்கு தமிழகம் முன்னேற அனைத்து மக்களும் உறுதியேற்போம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கை:

Pon. Radhakrishnan wishes Tamil New year

ஜெய ஆண்டு பிறந்ததன் பயனாக இந்தியத் திருநாட்டில் தேசபக்தி மிக்க நரேந்திர மோடியின் வெற்றிமிகு ஆட்சி ஏற்பட்டது. உலகம் முழுவதும் இந்தியாவை வாழ்த்தவும், வரவேற்கவும்; வரிசையில் வருகின்றன.

ஹேவிளம்பி ஆண்டு பிறக்கின்ற இந்த நல்ல நாளில், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை தருகின்ற தாமரையின் ஆட்சியை தமிழகம் கண்டிட மோடியின் வளர்ச்சி வேகத்துக்கு தமிழகம் முன்னேற அனைத்து மக்களும் உறுதியேற்போம்.

உலகத் தமிழர் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து கடைபிடித்து வரும் புத்தாண்டு தினமான சித்திரை முதல்நாள் அன்று அனைவர் இல்லமும் உள்ளமும்; நன்றாக நிறைந்து சிறப்புற்று வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

இந்தியாவில் தமிழகம் முதல் நிலை மாநிலமாக மாறிட ஹேவிளம்பி ஆண்டு வழி காட்டட்டும். ஹேவிளம்பி ஆண்டில் தமிழ், தமிழன், தமிழகம் உலகில் முதல் நிலை பெற்றிட உறுதி ஏற்று பணிபுரிவோம்; வெற்றி பெறுவோம். அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Central Minister Pon.Radhakrishnan extents his wishes to the Tamilnadu people for Tamil new year.
Please Wait while comments are loading...