பழுதால் நிறுத்தப்பட்ட கூடன்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திசையன்விளை: நெல்லை-கூடன்குளம் 2 வது அணுஉலையில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்னுற்பத்தி துவக்கியது. 250 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் கடந்த மே மாதம் 5 ந்தேதி டர்பைன் பழுது காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்பு மே 20 ந்தேதி பழுது சரி செய்யப்பட்டு மின்னுற்பத்தி துவங்கப்பட்டது. அதில் இருந்து நேற்று வரை 1000 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வந்தது.

Power generation at the second reactor of the Kudankulam Nuclear power plant resumes

இந்த நிலையில் நேற்று வால்வு பழுது காரணமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்று காலை பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்னுற்பத்தி துவங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 250 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. படிப்படியாக மின்னுற்பத்தி அதிகரிக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று தினங்களில் 1000 மெகாவாட்டை எட்டும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Power generation at the second reactor of the Kudankulam Nuclear power plant resumes after a gap.
Please Wait while comments are loading...