சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள்: ஜனாதிபதி ஒப்புதல்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 15 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து, 15 நீதிபதிகளும் விரைவில் பதவியேற்கவுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. தற்போது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் மொத்தம் 39 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 36 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிறப்பாக பணியாற்றும் 19 வழக்கறிஞர்கள், 11 மாவட்ட நீதிபதிகள் என 30 பேர் பட்டியலை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம், கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தது.
பட்டியலை பரிசீலித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 24 பேரின் பெயர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். முதல்கட்டமாக வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியம், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், நிஷாபானு, எம்.எஸ்.ரமேஷ், எஸ்.எம்.சுப்பிரமணியன், டாக்டர் அனிடா சுமந்த், மாவட்ட நீதிதிகள் எஸ்.பாஸ்கரன், பஷீர் அகமது, ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன், டீக்காராமன், கார்த்திகேயன் ஆகிய 15 பேரின் பெயரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்தார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications