கருணாநிதி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.. குடியரசுத் தலைவர் தமிழில் டிவிட்

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் டிவிட் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் டிவிட் செய்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்.

 President wishes for Karunanidhis speedy recovery and good health

கருணாநிதி தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார். அவருக்கு 9வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார்.

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை அவர் நேரில் சந்தித்தார். அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அறையில் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் இருந்தனர். தற்போது இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் டிவிட் செய்துள்ளார்.

அதில் ''திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.'' என்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+