அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு… செங்கோட்டையன் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இன்று அதிகாரபூர்வமாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இதனை அறிவித்துள்ளார். இதனையடுத்து அடுத்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வினை எழுத வேண்டும்.

Public exam for 11th student, says Sengottaiyan

முன்னதாக, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மாணவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மேலும் பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் பாடத்தில் சேர்க்கப்பட உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

நூலகங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான நூல்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்காக மாவட்ட நூலகங்களுக்கு 2.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Discussion are going on about Public exam for 11th student, said education minister Sengottaiyan today.
Please Wait while comments are loading...