மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்த இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு இறைச்சிக்காக மாடு மற்றும் ஒட்டகங்களை விற்கவோ, வாங்கவோ தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

puducherry government has passed a resolution against the federal government on the beef issue

மத்திய அரசின் இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன. பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்து நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் மாட்டிறைச்சி மீதான தடைக்கு எதிராக கேரளா, மேகாலயா உள்ளிட்ட மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசும் மத்திய அரசின் தடைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மாட்டிறைச்சி மீதான கட்டுப்பாடுகளை திரும்பப்பெறக்கோரி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சிக்கு எதிரான இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையை திரும்பப்பெறக்கோரியும் புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puducherry government has passed a resolution against the federal government in the beef issue. Chief Minister Narayanasami brought a resolution against beef.
Please Wait while comments are loading...