For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணிகள் இணைப்பை விடுங்க.. நதிகள் இணைப்புக்கு வழிய பாருங்க! புகழேந்தி பொளேர்!

அணிகள் இணைப்பு குறித்து பேசுவதை விட்டுவிட்டு நதிகள் இணைப்புக்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அம்மா அணி கர்நாடக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி அணிகள் அணைப்பு பிரச்சனையில் தலையிட வேண்டாம் என அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். மாறாக நதிகள் இணைப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது இருக்கும் இடம் தெரியாமல் இந்தவர் அக்கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி. அவரது மறைவுக்குப் பிறகு சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் தீவிர விசுவாசியாக மாறிவிட்டார்.

சசிகலாவையும் தினகரனையும் மகிழ்ச்சிப்படுத்த அவ்வப்பபது ஓபிஎஸையும் வாரி வருகிறார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் தினகரன் சிறைக்கு சென்ற பிறகு அவருக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களை நடத்தி வந்தார்.

புகழேந்தியின் சர்ச்சை பேச்சு

புகழேந்தியின் சர்ச்சை பேச்சு

அப்போது இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனக்கூறி பரபரப்பை கிளப்பினார். இது இரு அணி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மோடியின் விருப்பம்

மோடியின் விருப்பம்

இந்நிலையில் அண்மையில் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இரு அணிகளும் இணைந்தால் தான் நிலையான ஆட்சியைத் வழங்கமுடியும் என பிரதமர் மோடி தம்மிடம் கூறியதாக தெரிவித்தார்.

அணிகள் இணைப்பை விடுங்கள்

அணிகள் இணைப்பை விடுங்கள்

மேலும், தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்றும் ஊழலை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் பிரதமர் தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி அணிகள் இணைப்பை விட்டுவிட்டு நதிகள் இணைப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

பாஜகவினரிடைய சலசலப்பு

பாஜகவினரிடைய சலசலப்பு

புகழேந்தியின் இந்த பேச்சு பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பேச்சுவார்த்தைக்காக அமைத்த குழுவை கலைப்பதாக ஒபிஎஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
ADMK Amma party karnataka secretary Pugazhendi says that prime minister Modi should leave the admk teams join issue. and concentrate on the rivers join issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X