ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்- ஓபிஎஸ் அணி வேட்பாளர் இன்று அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகரில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் கிரீன்வேஸ்சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் ஆட்சிமன்றக்குழு கூட்டம் கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா மரணமடைந்ததால், ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் 3 அணிகளாக பிரிந்து போட்டியிடுகின்றனர்.

R.K. Nagar by poll - OPS team today announced candidate name

திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் மதிவாணன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. வேட்பாளரை தேர்வு செய்ய ஓபிஎஸ் அணி வீட்டில் மதுசூதனன் தலைமையில் ஆட்சிமன்ற குழு கூடி ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The rebel faction of the party, led by former Chief Minister O. Panneerselvam today announced candidate of RK Nagar constituency by poll on April 12,
Please Wait while comments are loading...