For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ஒரு அதிமுக வேட்பாளர் காலி?... மாஜி டிஜிபி ஆர். நட்ராஜ் வேட்பாளராகிறார்??

|

சென்னை: அதிமுகவில் திடீரென இணைந்துள்ள முன்னாள் டிஜிபி நடராஜ் லோக்சபா தேர்தலில் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியி்ல் நிறுத்தப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

அப்படி நடந்தால் இந்தத் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் ஒருவர் தூக்கப்படலாம் என்று பேசப்படுவதால் இநதத் தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்துள்ள அதிமுக வேட்பாளர்கள் கிலியில் உள்ளனராம்.

சென்னையில் நிற்க அதிக வாய்ப்பு

சென்னையில் நிற்க அதிக வாய்ப்பு

தற்போதைய சூழ்நிலையில் சென்னையில்தான் நடராஜ் நிறுத்தப்படலாம் என்று பலமாக பேசப்படுகிறது.

எந்தத் தொகுதியில்

எந்தத் தொகுதியில்

சென்னையில் இரு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் மீது திடீரென தலைமைக்கு அதிருப்தி பிறந்துள்ளதாம். அவர்களின் பிரசாரம் சரியில்லை என்றும் பீல் செய்கிறதாம். இதனால் அவர்களில் ஒருவரைத் தூக்க வாய்ப்புள்ளதாக சொலகிறார்கள்.

தென் சென்னைக்கு வாய்ப்பு

தென் சென்னைக்கு வாய்ப்பு

நடராஜ் பிராமணர் சமூகத்தை் சேர்ந்தவர். அனேகமாக அவரை தென் சென்னையில் நிறுத்தக் கூடிய வாயப்புகள் உள்ளன. மேலும் இந்தத் தொகுதியில் முன்பு நடராஜின் உறவினரான மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் போட்டியிட்டு வென்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

சேவை செய்ய வாய்ப்பு கொடுத்த அதிமுக

சேவை செய்ய வாய்ப்பு கொடுத்த அதிமுக

இதற்கிடையே தனக்கு பொதுச் சேவை செய்ய அதிமுக நல்ல வாய்ப்பை அளித்துள்ளதாக நடராஜ் கூறியுள்ளார். மேலும் தனக்கு சிறு வயது முதலே அரசியல் ஆர்வமும், தாகமும் இருந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகதான் வலுவான கட்சி

அதிமுகதான் வலுவான கட்சி

அதிமுகதான் வலுவான கட்சியாக இருப்பதாலும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாலும், அதில் சேர முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார் நடராஜ்.

ஜெயலலிதா சொன்னால் போட்டியிட ரெடி

ஜெயலலிதா சொன்னால் போட்டியிட ரெடி

மேலும், முதல்வர் ஜெயலலிதா தன்னை தேர்தலில் நிறுத்தினால் போட்டியிட தான் தயார் என்றும் நடராஜ் கூறியுள்ளார்.

English summary
Sources say that former DGP R Natraj, who has joined ADMK may be fieleded in LS election from anyone of the Chennai seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X