For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக பாஜக புதிய தலைவர் யார்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டி ஜரூராக நடந்து வருகிறது.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே தலைவராக பதவி வகித்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதால், ஒரு பதவியில் ஒருவர்தான் இருக்க வேண்டும் என்ற கட்சி விதிப்படி, அவர் அந்த பதவியை விட்டுக்கொடுக்க தமிழிசைக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய உட்கட்சித் தேர்தல், நவம்பரில் தொடங்கியுள்ளது.

Race started for Tamilnadu BJP chief post

பூத் வாரியாக கிளைத் தேர்தல்கள் நடந்து வருகின்றன. ஒன்றியம், மாவட்டம் என்று அனைத்து நிலையிலான தேர்தல்களையும் வரும் டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிக்க பாஜக மத்திய தலைமை, உத்தரவிட்டுள்ளது.

புதிய தலைவருக்கான போட்டியில், மீண்டும் தமிழிசை களத்திலுள்ளார். அவரை தவிர, மோகன்ராஜுலு, ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தலைவருக்கான போட்டியிலுள்ளனர்.

தலைவர் பதவி தேர்வு எப்போது நடைபெறும் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

English summary
Race started for Tamilnadu BJP chief post as Tamilisai tenure ended.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X