தென்காசி, மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை... குற்றாலம் அருவியில் நீர் வரத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி- வீடியோ

  தென்காசி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் எதிரொலியாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

  தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலத்தீவு அருகே நிலைகொண்டுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  Rains at Thenkasi and westernghats brings water in falls

  இதனிடையே இன்று தென்தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்தது. தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

  தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலம், ஐந்தருவிகளில் மழையின் காரணமாக வறண்டு கிடந்த அருவியில் நீர் வரத்து தொடங்கியது.

  நெல்லை மாவட்டத்தில் 4 மணி நிலவரப்படி 94.80 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 40 மி.மீ மழையும் சேரன்மகாதேவியில் 1.80 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Low depression gives rain to most of the southern tamilnadu areas, Thenkasi and western ghats also showered with rain because of this dried Kutralam falls gets water.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற