ரஜினியைப் பற்றி சு சாமிக்கு என்ன தெரியும்? - ராஜ் பகதூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியைப் பற்றி சுப்பிரமணிய சாமிக்கு என்ன தெரியும்? என்று ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க. எம்பி சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்து ரஜினியைத் திட்டி பேட்டி கொடுத்து வருகிறார். 90களில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தவர் சு சாமி.

Raj Bahdhur condemns Subramanya Swamy

ஆனால் இப்போது 'ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குதான் ஆபத்து. தமிழக அரசியல்வாதிகள் தமிழகத்தில் புலியாக உள்ளனர். ஆனால் அவர்கள் டெல்லி சென்றால் பூனைக்குட்டிதான்,' என்றெல்லாம் கூறி வருகிறார். ரஜினியை 420 என கீழ்த்தரமாகவும் விமர்சித்து, அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ரஜினிகாந்த் பற்றி சுப்பிரமணிய சாமிக்கு என்ன தெரியும்? அவர் எத்தனை முறை ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். வெறும் விளம்பரத்துக்காக ரஜினியின் பெயரைப் பயன்படுத்துகிறார். எந்தப் போர் என்பதை இன்னும் 2 மாதத்தில் ரஜினி அறிவிப்பார்," என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth's close friend Raj Bhadur condemned BJP MP Subramanyan Swamy for his commentd on Rajini
Please Wait while comments are loading...