For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'மலரட்டும் மனித நேயம்'.. சோளிங்கரில் ரஜினி ரசிகர்களின் பிரமாண்ட நலத்திட்ட விழா!

By Manjula
Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி ரசிகர்களால் நடத்தப்படும் 'மலரட்டும் மனித நேயம்' நிகழ்ச்சி இன்று சென்னையை அடுத்த சோளிங்கரில் நடைபெறுகிறது.

சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் தனது ரசிகர்களுடன் இணைந்து 'மலரட்டும் மனித நேயம்' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தார்.

ரஜினியின் விருப்பப்படி இன்று சோளிங்கரில் இந்த நிகழ்ச்சியை அவரது ரசிகர்கள் நடத்துகின்றனர். இந்த விழாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர்கள் வழங்குகின்றனர்.

Rajini Fans Organized Malaratum Manithaneyam Event

இதற்காக பிரமாண்ட மேடைகளை அமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் ரஜினி நடந்து வருவது போன்று 100 அடி உயரத்தில் கட்-அவுட் ஒன்றையும் அவர்கள் அமைத்திருக்கின்றனர்.

ரஜினி தற்போது கபாலி மற்றும் எந்திரன் 2.0 போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் இந்த விழாவில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

Rajini Fans Organized Malaratum Manithaneyam Event

இதனால் ரஜினியின் நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர், வழக்கறிஞர் வி.பாலு, தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குனர் லிங்குசாமி, நடிகர்கள் கருணாஸ், ராகவா லாரன்ஸ், கருணாகரன், ஜீவா, ஜோ மல்லூரி, பாபி சிம்ஹா ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

இவர்களின் தலைமையில் இந்த பொதுத்திட்ட உதவிகளை வழங்கும் விழா இன்று நடைபெறவுள்ளது. இதில் திரளான ரஜினி ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Today Rajini fans Organized Malaratum Manithaneyam Event at Solingar. "Welcoming each and every Thalaivar fan to ‪#‎Malaratum_Manithaneyam‬ function, It's going the Biggest function for Thalaivar ‪#‎Rajinikanth‬ in history. A emotional function. ‪#‎Solingar‬ ‪#‎Today‬".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X