சென்னையில் சீமான், வீரலட்சுமி கொடும்பாவிகளை எரிக்க முயன்ற ரஜினி ரசிகர்கள் கைது!
சென்னையில் சீமான், வீரலட்சுமி கொடும்பாவிகளை எரிக்க முயன்ற ரஜினி ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நேற்று ரஜினிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினருக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தார்.
அரசியலுக்கு வருவதை ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்கள் மத்தியல் உறுதியாக தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு தமிழ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரசிகர்களிடம் தான் ஒரு பச்சை தமிழன் என ரஜினி கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அவரது வீடு அருகே தமிழர் முன்னேற்றப்படையினர், போராட்டம் நடத்தினர்

ரஜினி கொடும்பாவி எரிப்பு
அப்போது ரஜினியின் கொடும்பாவியை வெடிவைத்து அவர்கள் தகர்த்தனர். இதைடுயடுத்து வீரலட்சுமி உள்ளிட்டோரரை போலீசார் கைது செய்தனர்.

ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தமிழர் முனேற்றப்படையை கண்டித்து ரஜினி ரசிகர்கள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு சீமான் மற்றும் வீரலட்சுமிக்கு எதிராக கோஷமிட்டன்ர்.

கொடும்பாவிகளை எரிக்க முயற்சி
பின்னர் அப்பகுதியில் ஊர்வலமாக சென்ற அவர்கள் ரஜினிக்கு எதிராக பேசிய சீமான், விரலட்சுமின் கொடும்பாவிகளை எரிக்க முயன்றனர். இதையடுத்து ரஜினி ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.

பெரும் பரபரப்பு
ரஜினி ரசிகர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக மதுரையில் நேற்று வீரலட்சுமி கொடும்பாவியை எரிக்க முயன்ற ரஜினி ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications