சிஸ்டம் ஸ்லோவாக இருந்தால் காத்திருங்கள்... ரஜினிமன்றம் இணையதள பக்கம் பற்றி சுதாகர் டுவீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிமன்றம் இணையதள பக்கத்தில் ஒரே நேரத்தில் பலரும் பதிவு செய்ய முயற்சித்ததால் சர்வர் முடங்கியுள்ளது. சிஸ்டம் ஸ்லோவாக இருந்தால் காத்திருந்து பதிவு செய்யுமாறு ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரசிர்கள் அல்லாதவர்கள், பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றத்தினர் என அனைவரையும் அரசியல் மாற்றம் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வர ரஜினிமன்றம்.ஓஆர்ஜி என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்யுமாறு நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். அரசியல் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே அதிரடியாக இணையதள பக்கம் மற்றும் செயலியை ரஜினி இன்று அறிமுகம் செய்தார்.

இந்த இணையதள பக்கத்தில் தங்களின் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்யுமாறு ரஜினி வீடியோ வடிவில் பேசி வெளியிட்டிருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

பதிவு செய்ய முடியவில்லை

பதிவு செய்ய முடியவில்லை

இதனால் அடுத்த சில நிமிடங்களிலேயே இணைதள பக்கத்தில் பலரும் பதிவு செய்ய முயற்சித்ததால் பலரும் உறுப்பினராக பதிவு செய்ய முடியாமல் சிரமத்தை சந்தித்தனர். இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர், ரஜினிமன்றம் பக்கத்தில் பதிவு செய்ய அனைவரும் ஆர்வமாக இருப்பதை புரிந்து கொள்கிறோம்.

சிஸ்டம் ஸ்லோ

சிஸ்டம் ஸ்லோ

அனைவரும் ஒரே நேரத்தில் முயற்சிப்பதால் சிஸ்டத்தில் வேகக்குறைவு ஏற்படலாம். எனினும் எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். சில மணி நேரங்களில் இது சரியாகிவிடும். இந்தத் தகவலை உங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களது பொறுமைக்கும், புரிந்து கொள்ளும் திறனுக்கு நன்றி என்றும் சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.

உறுதியான கட்டமைப்பு வேண்டும்

சுதாகரின் டுவீட்டிற்கு பலரும் நன்றி தெரிவித்திருந்தாலும். ஒரு சிலர் தங்களது அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர். இது தான் அரசியலில் வைக்கும் முதல் அடி அதிலேயே சறுக்கலாமா? உறுதியான ஐடி கட்டமைப்பு வேண்டும் என்று இவர் பதில் டுவீட்டியுள்ளார்.

பதிவு செய்ய முடியவில்லை

இணையதளத்தை நல்ல டெவலப்ர்களை வைத்து பராமரிக்க வேண்டும். ஒரு மணி நேரமாக முயற்சித்தும் பதிவு செய்ய முடியவில்லை சர்வர் வேகம்குறைவாக இருக்கிறது என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் இவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajini fansclub authority Sudhakar says in twitter that due to huge rush system may encounter slowness, so bear with them as things will ease after few hours.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற