ரஜினி காங்கிரஸுக்கும் வரமாட்டார்...பாஜகவுக்கும் போக மட்டார்! திருநாவுக்கரசர் ஆருடம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி காங்கிரஸுக்கு வரமாட்டர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,''ரஜினி அரசியலுக்கு வருவார் என நான் நம்புகிறேன். அப்படி வந்தாலும் அவர் தனிக்கட்சி தான் தொடங்குவார்.

 Rajini neither go congress nor Bjp, will start new party

ஆனால் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கும் போகமாட்டார். காங்கிரஸ் கட்சிக்கும் வரமாட்டார்'' என்றவர், அவர் நிச்சயம் காங்கிரஸுக்கு வரமாட்டார் என தெரிந்துதான் அவரை நாங்கள் அழைத்தது இல்லை'' என கூறினார்.

ரஜினி அரசியலுக்கு வருகிறார் என பேச்சு தொடங்கியதிலிருந்து, திருநாவுக்கரசர் ஆரம்பத்திலிருந்தே ரஜினி தனிக் கட்சிதான் தொடங்குவார் என தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth will start a new political party and he never come to congress told Thirunavukkarasar, TN congress committee leader
Please Wait while comments are loading...