சட்டமன்ற தேர்தல் வரை இதுதான் செய்ய போகிறேன்.. ரஜினியின் மாஸ்டர் பிளான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசியலுக்கு வருவது உறுதி... ரஜினியின் பரபரப்பு பேச்சு

  சென்னை: தன்னுடைய அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும் என்று ரஜினி அறிவித்து இருக்கிறார். சட்டமன்ற தேர்தல் வரை எந்த மாதிரியான அரசியல் செய்ய போகிறேன் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார்.

  தனி கட்சி ஆரம்பித்து வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறார். மேலும் பாராளுமன்ற தேர்தலில் இருந்து அதற்கான சரியான முன்னெடுப்புக்களை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

  அதேபோல் தன்னுடைய திட்டங்கள் எப்படி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தற்போது இருக்கும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்படியே மாற்றாக இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

  கட்சியை பலப்படுத்துவேன்

  கட்சியை பலப்படுத்துவேன்

  இந்த அறிவிப்பில் அவர் சட்டமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு இன்னும் 3 வருடங்கள் மிச்சம் இருக்கிறது. எனவே அதுவரை கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக பலப்படுத்த முடிவெடுத்து உள்ளார். அதன் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

  நோ வெட்டி பேச்சு

  நோ வெட்டி பேச்சு

  அதேபோல் தன்னுடைய ரசிகர்களை பாராளுமன்ற தேர்தல் வரை கொஞ்சம் அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார். இன்னும் இவரது அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியாத காரணத்தால் ரசிகர்கள் தவறாக வெளியில் எதுவும் பேசிவிட கூடாது என ரஜினி நினைக்கிறார். ஆகவே இன்னும் ஒரு வருடத்திற்காவது தன்னுடைய ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று ரஜினி நினைக்கிறார்.

  கட்சியின் காவலர்கள்

  கட்சியின் காவலர்கள்

  50 ஆண்டுகால தமிழக அரசியலில் தொண்டர் தலைவர் என்ற உறவுதான் இருந்து வந்தது. ஆனால் அதை மாற்றும் வகையில் தன் ரசிகர்கள் அனைவரும் காவலர்களாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தானும் காவலனாக இருக்க போவதாக கூறியுள்ளார் . எனவே அவர் தொண்டர் தலைவர் வேறுபாட்டை களைய விரும்புகிறார் என்று கூறலாம்.

  உள்ளூர் கழகங்களை சரி செய்தல்

  உள்ளூர் கழகங்களை சரி செய்தல்

  அவரது அரசியல் அறிவிப்பில் இது மிக முக்கியமானது ஆகும். அதன்படி தன்னுடைய எல்லா ரசிகர் மன்றங்களையும் சரியாக செயல்படும் படி கூறியுள்ளார். எனவே உள்ளூரில் இருந்து நகரம் வரை அனைத்து இடங்களிலும் தன்னுடைய கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் ரஜினி. மீண்டும் உள்ளாட்சிகளை நம்பி ஒரு அரசியல் கட்சி தமிழ்நாட்டில் உருவாகி உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajini announced his political entry. He says that he will contest in Tamilnadu state election in 2021. He also said about his political views and plans for next few years.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற