"பச்சை தமிழன்" ரஜினி கர்நாடகாவிற்கு எதிராக குரல் தருவாரா?.. கேட்கிறார்கள் டெல்டா விவசாயிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: பச்சை தமிழன் ரஜினிகாந்த், காவிரி பிரச்சனையில் கர்நாடகாவை எதிர்த்து போராட துணிவு உள்ளதா? என்று நடிகர் ரஜினிகாந்திற்கு டெல்டா பாசன விவசாய சங்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் தான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருப்பதால் தன்னை பச்சைத் தமிழன் என்று கூறினார். தன்னை தமிழகத்தை விட்டு விரட்டினால் இமயமலைக்குத்தான் போவேன் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் போது தெரிவித்தார்.

அவரது அரசியல் பேச்சு ரசிகர்களுக்கு உற்சாகமளித்தாலும், பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பச்சை தமிழன்

பச்சை தமிழன்

பச்சை தமிழன் பேச்சுக்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். காவிரி பிரச்சனையில் கர்நாடகத்துக்கு எதிராக போராட துணிவு உள்ளதா?என்று கேட்டுள்ளனர்.

எங்கே போனார்

எங்கே போனார்

வரலாறு காணாத வறட்சியால் தமிழக விவசாயிகள் மடிந்து போனபோது ரஜினிகாந்த் எங்கே போனார்? அப்போது அமைதியாகத்தானே இருந்தார்.

மவுன சாமியார்

மவுன சாமியார்

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக புரட்சி ஏற்பட்டபோது மவுன சாமியாராக இருந்தவர் ரஜினி என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர். தமிழகர்களுக்கு ஆதரவாக எதுவுமே பேசாதவர் ரஜினி.

காமெடியா இருக்கே

காமெடியா இருக்கே

தமிழகத்திற்கு எதுவுமே செய்யாத ரஜினி அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று பேசுவது காமெடியாக இருக்கிறது என்றும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The TamilNadu farmers have asked actor Rajinikanth will raise the questions against Karnataka support TamilNadu delta farmers.
Please Wait while comments are loading...