ராகவேந்திரா மண்டபத்துக்கு பிஎம்டபிள்யூ காரில் வந்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாக இன்னோவா காரில் மண்டபம் செல்லும் ரஜினிகாந்த் இன்று பிஎம்டபிள்யூ காரில் வந்தார்.

ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார்.

Rajinikanth came to Mandapam by BMW car

கடந்த 5 நாட்களாக ரஜினியிடம் அரசியல் குறித்து கேட்கப்பட்டு அவர் பொறுத்திருங்கள் என்றார். இந்நிலையில் இன்று ராகவேந்திரா மண்டபத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

போயஸ் கார்டனில் இருந்து வழக்கமாக இன்னோவா காரில் புறப்பட்ட ரஜினி, இன்று பிஎம்டபிள்யூ காரில் வந்தார். ரசிகர்கள் அதிகம் குவிந்துள்ளதால், 'சன் ரூஃப்' வழியாக அவர்களை பார்க்க வசதியாக காரை ரஜினி மாற்றியதாக கூறப்படுகிறது.

அரசியல் அறிவிப்பை வெளியிட்டு வீடு திரும்பும்போது ரசிகர்கள் சூழ்வார்கள் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டாதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth has come to Mandapam by BMW car. Usually he come by Innova.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற